இதுவரை தமக்கு கிடைத்த கடவுச்சீட்டு விபரங்களை குவைத்துக்கான இலங்கை தூதரகம் வௌியிட்டுள்ளது.
கீழ்வரும் இலக்கங்களையுடைய விண்ணப்பதாரிகளின் கடவுச்சீட்டுகள் மாத்திரம் தற்போது தூதரகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும்
கடவுச்சீட்டுகளை வார நாட்களில் காலை 08.30 மணி முதல் பிற்பகல் 12.30 வரை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தூதரகம் அதன் முகப்புத்த பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
கடவுச்சீட்டைப் பெற மஞ்சள் நிற பற்றுச்சீட்டு , தற்போது பாவனையிலுள்ள கடவுச்சீட்டு ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் . அத்தோடு தற்காலிக கடவுச்சீட்டொன்று உங்கள் வசம் இருப்பின் அதனையும் எடுத்து வருவது அவசியமாகும் .
பிள்ளைகளின் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ள வருகை தரும் தாய் அல்லது தந்தை , தனது கடவுச்சீட்டை எடுத்து வருவதோடு மஞ்சள் நிற பற்றுச்சீட்டு , குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை எடுத்து வருவது அவசியமாகும் .அத்தோடு தற்போது பிள்ளையிடம் தற்காலிக அல்லது செல்லுபடியான கடவுச்சீட்டொன்று இருப்பின் அதனையும் எடுத்து வருவது அவசியமாகும் .
கடவுச்சீட்டுகள் அதன் உரிமையாளர்களிடம் மட்டுமே கையளிக்கப்படும் என்பதனை தயவு கூர்ந்து கவனத்திற் கொள்ளவும் என குவைத்துக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
கிடைக்கப் பெற்ற கடவுச்சீட்டு இலங்கைங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது