புதிய கொவிட் 19 கட்டபாடுகளை விதித்துள்ள குவைத்

புதிய கொவிட் 19 கட்டபாடுகளை விதித்துள்ள குவைத்

புதிதாக கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டதையடுத்து குவைத் அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை நேற்று விதித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இப்புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய குவைத்தில் உடற்பயிற்சிக்கூடங்கள் மற்றும் அழகுநிலையங்களை மூடுமாறு அறிவித்துள்ளதுடன் ஏனைய வர்த்த நிலையங்களை இரவு 8.00 மணி ​தொடக்கம் காலை 7.00 மணி வரை ஒரு மாதத்திற்கு மூடுமாறும் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரு் 7ம திகதி வரை இத்தடையுத்தரவு நடைமுறைக்கு வரவுள்ளது. எனினும் மருந்தகங்கள், பல்பொருள் அங்காடிகள், உணவுப்பொருள் விற்பனை நிலையங்களுக்கு விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.

உணவகங்கள், மண்டபங்கள் என்பவற்றையும் இரவு 8.00 மணி தொடக்கம் அதிகாலை 7.00 மணி வரை மூடுமாறு உத்தவிடப்பட்டுள்ளதுடன் கொண்டாட்டங்கள், ஒன்றுகூடல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image