குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வௌிநாட்டவர்கள் சொந்த நாடு திரும்புவதற்கான ஒரு மாத கால பொது மன்னிப்புக் காலத்தை குவைத் அரசாங்கம் அறிவித்துள்ளது.
குடியிருப்பு சட்டத்தை மீறி இருப்பவர்களுக்கு தங்களது நிலைகளை திருத்திக்கொள்ள (அக்காமா இல்லாமல் அல்லது குவைத்தின் சட்டத்தை மீறி தங்கியிருப்பவர்களுக்கு) 15/4/2021 முதல் 15/5/2021 வரை ஒரு மாதத்திற்கு நீட்டிக்கும் அமைச்சரவை ஆணையை குவைத் உள்துறை அமைச்சர் ஷேக் தாமீர் அலி சபா அல்-சலாம் அல்-சபா வெளியிட்டுள்ளார்.
இந்த காலகட்டத்திற்கு பிறகு குடியிருப்பு சட்டத்தை மீறி இருப்பவர்கள் தங்களது குடியிருப்பு நிலையை சரி செய்ய இல்லாமல் இருந்தால், ரத்து செய்து நாடுகடத்தப்படுவார்கள் என்றும், எதிர்காலத்தில் குவைத்துக்குள் நுழைவதற்கு நிரந்தரமாக தடை செய்யப்படுவார்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு சட்டரீதியான விளைவுகளையும் தடுக்க உங்கள் குடியிருப்பு நிலையை விரைவில் சரி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.