ஞாயிற்றுக்கிழமை 51 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர் மேலும் 3 ஆம்திகதி காலை திருகோணமலை கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான மீன்பிடி படகில் 41 ஆண்கள், 5 பெண்கள் 5 குழந்தைகள் உட்பட மொத்தமாக 51 பேரை கடற்படையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கம்பஹா மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. அவர்களை கடற்படையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
அத்துடன் மாரவில கடற்படை, இலங்கை கரையோர காவல்படை மற்றும் பொலிசார் ஆகியோர் தனித்தனியாக கண்டுபிடித்து, நாட்டை விட்டு வெளியேற லாட்ஜில் தங்கியிருந்த 24 பேரை கைது செய்துள்ளனர். இந்தக் குழுவில் 08 ஆண்கள், 06 பெண்கள் மற்றும் 10 குழந்தைகள் உள்ளடங்குவர்.குறித்த குழுவினர் தங்குவதற்கு வசதி செய்து கொடுத்த விடுதி காப்பாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் மட்டக்களப்பு, வாழைச்சேனை மற்றும் சிலாபம் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மாரவில பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய வாரங்களில் சட்ட விரோதமாக நாட்டை விட்டு வெளியேற முற்பட்டவர்களை கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கீழ்வருமாரு
ஜூன் 27: அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 47 பேர் நீர்கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜூன் 27: கிழக்கு கடற்கரையிலிருந்து நாட்டை விட்டு வெளியேற முயன்ற 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜூன் 23: நாட்டை விட்டு ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 35 பேர் பாணந்துறையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜூன் 15: நாட்டை விட்டு வெளியேற முயன்ற 64 பேர் கிழக்கு கடற்கரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.