தமிழ்நாட்டிலிருந்து சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயன்ற இலங்கையர்கள் கைது!
தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் இருந்து சட்டவிரோதமாக நியுசிலாந்து செல்ல முற்பட்ட 6 இலங்கையர்கள் தமிழ்நாடு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் துஷ்யந்தன் மற்றும் புவனேஷ்வரி ஆகியோரே இந்த சட்டவிரோத பயணத்திற்கான திட்டமிடலை மேற்கொண்டவர்கள் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று தமிழ்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் மயிலைதுறை மாவட்ட பூம்புகார் பிரதேச படகு உரிமையாளர் ஒருவரிடம் படகை கொள்வனவு செய்ய திட்டமிட்டிருந்தனர். தன்னை மீனவர் என்று கூறிக்கொண்ட துஷ்யந்தன் என்ற நபர் குறித்த படகு உரிமையாளரிடம் 36 இலட்சம் ரூபாவுக்கு படகை கொள்வனவு செய்வது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
கொள்வனவுத் தொகையில் முற்பணமாக 11 இலட்சம் ரூபா வழங்கப்பட்ட நிலையில் அகதிகளாக கடந்த 4ம் திகதி தமிழ்நாட்டுக்கு அனைவரும் கடந்த செவ்வாய்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்கியிருந்த விடுதியிலிருந்து கிடைத்த ரகசிய தகவலுக்கமைய சுற்றி வளைக்கப்பட்ட விடுதியில் இருந்த குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 16,92, 951 ரூபா இந்திய ரூபாக்களை கைப்பற்றியுள்ளதுடன் இவ்வாட்கடத்தல் செயற்பாடுகளுக்கு மேலும் சிலர் தொடர்புபட்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ள தமிழ்நாட்டுப் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.