மின்சார வாகனம் இறக்குமதி செய்ய காத்திருக்கும் புலம்பெயர் தொழிலாளர் கவனத்திற்கு!

மின்சார வாகனம் இறக்குமதி செய்ய காத்திருக்கும் புலம்பெயர் தொழிலாளர் கவனத்திற்கு!

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கும் வேலைத்திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, புலம்பெயர் தொழிலாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட மின்சார வாகனங்களை அகற்றும் பணியை இலங்கை சுங்கத்துறை ஏற்கனவே ஆரம்பித்துள்ளது.

கடந்த வருட இறுதிக்குள் இலங்கைக்கான வெளிநாட்டுப் பணம் 475 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும் இந்த வேலைத்திட்டம் வெளிநாட்டுப் பணம் அதிகரிப்பதற்கு பங்களிப்பு வழங்கியதாகவும் தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

 

இந்தத் திட்டத்தின் மூலம், இலங்கைக்கு அவர்கள் அனுப்பிய பணத்தில் 50% அல்லது அதற்கும் குறைவான மின்சார வாகனத்தை இறக்குமதி செய்ய வௌிநாடுகளில் பணிபுரியும் மற்றும் பணிபுரிந்து நாடு திரும்பிய இலங்கையர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது.

மேலும், வாகனங்களை இறக்குமதி செய்யும் போது ஏற்படும் வரிக் கட்டணங்கள் வெளிநாட்டு நாணயத்தில் தீர்க்கப்பட வேண்டும்.

எவ்வாறாயினும், ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டம் தொடர்பில் புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து சாதகமான கருத்துக்கள் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image