பிரதமர் செயலக அதிகாரியாக நடித்த பணமோசடி செய்தவர் கைது!
பிரதமர் செயலகத்தின் சிறப்பு திட்ட பணிப்பாளர் போல் நடித்து இளைஞர்களை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி ஏமாற்றியு நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிரதமர் செயலகத்தில் அவ்வாறானதொரு பதவியை வகிக்காத இவர், அவ்வப்பொழுது பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிந்து இவ்வாறு பண மோசடியில் ஈடுபட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பண மோசடி செய்த வழக்குகள் பலவற்றுடன் தொடர்பிலும் நீண்டகாலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டவர் எனவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பதுளை லுணுகல பிரதேசத்திற்கு வந்த இவர், அப்பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது, அங்கு பணிபுரியும் இளைஞர் ஒருவரை அறிந்து, வெளி நாட்டில் வேலைக்கு அனுப்புவதாக கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விடுதி சந்தையில் தங்கியிருந்த இரண்டு நாட்களில் உணவு மற்றும் அறை வாடகைக்கு 36,000 ரூபாயை செலுத்த தவறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.