வீட்டுப்பணி உதவியாளர்களாக வௌிநாடு செல்வோருக்கான அறிவுறுத்தல்!

வீட்டுப்பணி உதவியாளர்களாக வௌிநாடு செல்வோருக்கான அறிவுறுத்தல்!
வீட்டுப் பணி உதவியாளர்கள் பதவிக்கு முதல் முறையாக வௌிநாடு செல்லும் பெண்களுக்கு வழங்கப்படும் பயிற்சிநெறிக்கான காலத்தை நீடிக்க வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தீர்மானித்துள்ளது.
 
15 நாட்களுக்கு வழங்கப்படும் இப்பயிற்சி நெறியானது எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் NVQ 3 மட்டத்திற்கு 28 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக பணியகம் அறிவித்துள்ளது.
 
அதன்படி, 25 நாட்கள் எழுத்து மற்றும் செயன்முறை பயிற்சி வழங்கப்படும், மேலும் 3 நாட்கள் தேசிய தொழில்முறை தகுதி மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்படும்.
 
இது தவிர, ஏப்ரல் 1, 2023 முதல், வீட்டுப் பராமரிப்பு உதவியாளர்  பதவிக்கு வெளிநாடு செல்லும் பெண்கள், பணியகப் பயிற்சியுடன் கூடிய உயர் மதிப்புடைய NVQ 3 சான்றிதழுடன் பணியகப் பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
 
இதுவரை பணியகப் பயிற்சி பெற்ற பெண்களுக்கும் 2023 ஜனவரி 31 அல்லது அதற்கு முன் பயிற்சியை முடித்த பெண்களுக்கும் இந்த நிபந்தனை பொருந்தாது என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
 
சர்வதேச தரத்திற்கு ஏற்ப நன்கு பயிற்சி பெற்ற ஊழியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான பயிற்சி வகுப்புகளின் தரத்தை அதிகரிக்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image