மனித கடத்தல் பல உயிர்களை பாதுகாப்பற்றதாக ஆக்கியுள்ளது

மனித கடத்தல் பல உயிர்களை பாதுகாப்பற்றதாக ஆக்கியுள்ளது

மத்திய கிழக்கில் வேலை என்ற போர்வையில் மனித கடத்தல் பல உயிர்களை பாதுகாப்பற்றதாக ஆக்கியுள்ளதென தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

உரிய முறையின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் முறையான ஒப்பந்தங்களுடன் வெளிநாட்டு வேலைகளுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டாலும், பலர் சுற்றுலா விசா மூலம் துபாய் உட்பட மத்திய கிழக்கு பிராந்தியத்திற்குள் நுழைய முயற்சிக்கின்றனர்.

வேலைக்காக சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சிப்பதும் மனித கடத்தல்காரர்களுக்கு வாய்ப்பாகும். மத்திய கிழக்கு பிராந்தியமும் தனித்துவமானது. ஏனெனில், இந்நாட்டிலிரிந்து அதிகளவில் பெண்கள் செல்லும் பிரதேசம் அது. கடினமான பொருளாதாரத்திற்கு ஒரே தீர்வு சுற்றுலா விசாவுடன் நாட்டை விட்டு வெளியேறுவது என்று பலர் நினைக்கிறார்கள். இறுதியில் பணம் மட்டுமல்ல உயிரும் பணயம் வைக்கப்படுகிறது.

சுற்றுலா விசாவில் வேலை தேடுவதானது, இறுதியில் கடத்தல்காரர்களின் வலையில் முடிகிறது. அகப்பட்டுக்கொள்ள வேண்டாம் என்று நாம் எவ்வளவு சொன்னாலும், மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை தேடி சட்டவிரோதமாக செல்லும் அதே மக்கள் தெருக்களிலும் பாதுகாப்பான இல்லங்களிலும் தங்கள் உயிரை மீட்க கோருகின்றனர்.

தவறான வழியில் வந்த தங்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துச்செல்லவில்லை என அதிகாரிகள் மீது குற்றம் சாட்டுகின்றனர். மாட்டிக் கொள்ளாதீர்கள், அதனால்தான் வேலைக்குச் செல்லும்போது தகுதிகளை பூர்த்தி செய்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு செல்லுங்கள் என்று தாம் தொடர்ந்து கோருவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image