கட்டாரில் சட்டவிரோதமாக தங்கியிருப்போருக்கான மன்னிப்பு காலம் நீடிப்பு!

கட்டாரில் சட்டவிரோதமாக தங்கியிருப்போருக்கான மன்னிப்பு காலம் நீடிப்பு!

கட்டாரில் சட்ட விரோதமாக தங்கியிருப்போருக்கான மன்னிப்பு காலம் (சலுகை காலம்) ஏப்ரல் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாரின் 2015ம் ஆண்டு 21ம் இலக்க சட்ட விதிகளின் படி நாட்டிற்கு நுழைதல் மற்றும் வெளிறுதல் தொடர்பான விதிகளை மீறியவர்கள், அந்த சட்ட அந்தஸ்த்தை சரி செய்து கொள்ள கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. மேற்படி சலுகை காலமானது எதிர்வரும் 30ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கட்டாரின் உள்துறை அமைச்சு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.

சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்கள் தங்களது சட்ட அந்தஸ்த்தை மாற்றிக்கொள்வதோடு அபராதங்களில் 50 சதவீதத்தை மாத்திரம் செலுத்தினால் போதுமானது என்பதாகவும் உள்துறை அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

சட்ட விரோதமாக தங்கியிருப்பவரகள் தங்களது விண்ணப்ப படிவங்களை உள்துறை அமைச்சின் Search and Follow-up Department and the violators willing  துறையில் சமர்ப்பிக்க முடியும். உள்துறை அமைச்சின் மேற்படி துறையானது உம்மு ஸலால், அல் ரய்யான், மிசைமர், அல் வக்ரா மற்றும் உம்மு சுனைம் போன்ற நகரங்களில் அமைந்துள்ளது

சட்ட அந்தஸ்தை சரி செய்து கொள்ள நன்பகல் ஒரு மணிக்கும். மாலை ஐந்து மணிக்கும் உள்துறை அமைச்சின் மேற்படி கிளைகளை தரிசிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சலுகை காலத்தில் பின்வரும் சட்ட அந்தஸ்த்துகளை சரிசெய்து கொள்ள முடியும்.

  1. வதிவிட விதிகளை மீறிய வெளிநாட்டவர்கள் (நிறுவனங்கள்)
  2. வேலை விசா விதிகளை மீறிய வெளிநாட்டவர்கள்
  3. வீட்டு வேலையாட்கள் மற்றும் வெளிநாட்டினர்
  4. குடும்ப வசிப்பிடங்களை மீறிய வெளிநாட்டவர்கள்

வழங்கப்பட்டுள்ள சலுகை காலத்தை முறையாக பயன்படுத்தி சட்ட அந்தஸ்த்துக்களை சரிசெய்து கொள்ளுமாறு கத்தாரின் உள்துறை அமைச்சு பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கத்தார் தமிழ்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image