துபாய், ஷார்ஜாவை தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறையை அறிவித்த 2 எமிரேட்

துபாய், ஷார்ஜாவை தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறையை அறிவித்த 2 எமிரேட்

அமீரக அரசானது வரவிருக்கும் ஈத் அல் ஃபித்ரை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 30 முதல் மே 08 வரை என 09 நாட்கள் விடுமுறையை சமீபத்தில் அறிவித்ததிருந்தது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து ஷார்ஜா மற்றும் துபாய் ஆகிய எமிரேட்களும் அரசு ஊழியர்களுக்கான விடுமுறைக் காலத்தை 9 நாட்களாக நீடித்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளன. அதன்படி ஷார்ஜா மற்றும் துபாயில் ஏப்ரல் 30 சனிக்கிழமை முதல் மே 08 ஞாயிற்றுக்கிழமை வரை ஈத் அல் விடுமுறை இருக்கும் என்றும் இதன் மூலம் அரசு ஊழியர்கள் 9 நாட்கள் விடுமுறை பெறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது அபுதாபி மற்றும் ராஸ் அல் கைமா ஆகிய இரு எமிரேட்டுகளும் அரசு ஊழியர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை உறுதி செய்யும் விதமாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளன. மேலும் மே 9ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஊழியர்கள் படிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் அமீரகத்தின் துறை ஊழியர்களுக்கு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி அவர்களுக்கு ரமலான் 29 முதல் ஷவ்வால் 3 வரை என 4 அல்லது 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கலீஜ் தமிழ்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image