அந்நிய செலாவணி தொடர்பில் மத்திய வங்கியின் புதிய அறிவித்தல்
வௌிநாட்டு ஊழியர்கள் அனுப்பும் அந்நிய செலாவணியில் 50 வீதத்தினை வாராந்தம் மத்திய வங்கிக்கு விற்பனை செய்யுமாறு மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை (21) திகதி நடைமுறைக்கு வந்த குறித்த அறிவிப்பு எதிர்வரும் ஜூலை மாதம் 29ம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து பெறப்படும் அந்நிய செலாவணியில் 25 வீதத்தினை அமெரிக்க டொலர்களாக மத்திய வங்கிக்கு விற்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்நிய செலாவணி கொள்முதலானது நாட்டிற்கு அத்தியாவசியமான இறக்குமதிகளை ஒழுங்குப்படுத்த உதவியாக உள்ளது என்று மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.