இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பயிற்சிக்காக இணைத்துக்கொள்ளப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு பயிற்சிகள் வழங்குவதற்கு பயிற்றுநர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய தகுதியுடையவர்களிடமிருந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
வெற்றிடங்கள்
ஜப்பான் மொழி பயிற்றுநர் (தமிழ்/ சிங்களம்)
பட்டப்படிப்புடன் ஜப்பான் மொழிச் தேர்ச்சி NAT- 1 தொடக்கம் NAT - 4 தகமையுடன் ஒரு வருட அனுபவம் (தாதியர் சேவை மற்றும் உணவு தொழில்நுட்பம் ஆகியவற்றுடன் தொடர்புபட்ட ஜப்பான் மொழி பயிற்சி அடிப்படை தேர்ச்சி பரீட்சையான JFT யில் தோற்றியிருந்தால் மேலதிக தகமையாக கருதப்படும்.)
வயதெல்லை 22 -55
பராமரிப்புச் சேவை பயிற்றுநர்
பராமரிப்பு சேவை தொடர்பான பட்டப்படிப்பு அல்லது டிப்ளோமாவுடன் 3 வருட அனுபவம். (சிங்களம் மற்றும் ஆங்கில மொழியில் கற்பிக்கும் திறமை இருப்பது கட்டாயமாகும்.)
வயதெல்லை 22 -55
அழகுகலை பயிற்றுனர்
அழகுகலை டிப்ளோமா தகமையுடன் இரு வருட அனுபவம் ( சிங்களம் மற்றும் ஆங்கில மொழியில் கற்பிக்கும் திறமை)
வயதெல்லை 22 -55
கொரிய மொழி பயிற்றுநர்
கொரிய மொழி தொடர்பான பட்டப்படிப்பு அல்லது டிப்ளோமா சான்றிதழ் உடையவராக இருப்பதுடன் மொழி கற்பித்தலில் 2 வருட அனுபவம்.
வயதெல்லை 22 -55
உடற்பயிற்சி பயிற்றுனர்
உடற்பயிற்சி தொடர்பான டிப்ளோமா சான்றிதழுடன் 2 வருட தொழில் அனுபவம் பெற்றித்தல் அல்லது முப்படை, பொலிஸ் ஆகியவற்றில் உடற்பயிற்சி பயிற்றுநராக 3 வருடம் பணியாற்றிய அனுபவம் மற்றும் சிறந்த உடல் ஆரோக்கியம் கட்டாயமாகும்.
வயதெல்லை 22 -55
கொரிய மொழி பயிற்றுநர்
கொரிய மொழி தொடர்பான பட்டப்படிப்பு அல்லது டிப்ளோமா சான்றிதழுடன் மொழி கற்பித்தலில் ஒரு வருட அனுபவம்.
வயதெல்லை 22 -55
பணியகத்தில் பதிவு செய்து வௌிநாடு செல்வோருக்கு இலவச காப்புறுதி- அறிவீர்களா?
வெளிநாட்டு ஊழியர்களுக்கு சேவை செய்ய புதிய மொபைல் செயலி பயன்பாடு
கொரிய மொழிப் பரீட்சைக்கான அனுமதி அட்டை வழங்கல்!
இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை தரவிறக்கம் செய்து பூரணப்படுத்தி வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கோரப்படுகிறது