ருமேனிய எல்லையைக் கடக்க முற்பட்ட 25 இலங்கையர்கள் கைது!

ருமேனிய எல்லையைக் கடக்க முற்பட்ட 25 இலங்கையர்கள் கைது!

ருமேனியா எல்லையை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சட்டவிரோதமாக கடக்க முயற்சித்த 25 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏனைய நாட்டினருடன் சேர்ந்து குறித்த இலங்கையர்கள் ருமேனிய எல்லையை கடக்க முயற்சித்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

துருக்கி, சிரியா, ஈராக் ஆகிய நாடுகளின் பிரஜைகளுடன் சேர்ந்து நாட்டின் எல்லையை கண்டயினர் டிரக் மற்றும் மினி பஸ் ஆகியவற்றில் கடக்க முயற்சித்த சந்தர்ப்பத்தில் 16 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடியேற்றவாசிகள் சரக்கு பெட்டிக்கும், பயணிகளுக்கான பெட்டியின் பின் இருக்கைக்கும் இடையே சிறப்பாக அமைக்கப்பட்ட இடங்களில் மறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 16 இலங்கையர்களும் 22 மற்றும் 51 வயதுடையவர்கள் என்றும் அவர்களிடமிருந்த தனிப்பட்ட ஆவணங்களுக்கமைய சட்டரீதியாக ருமேனியாவில் குடியேறியவர்கள் என்றும் ருமேனிய தேசிய செய்தி நிறுவனமான Agerpres தெரிவித்துள்ளது.

இதேவேளை, இச்சம்பவத்திற்கு முன்னர் டிமிசோரா நகரில் ருமேனிய பிரஜைகளுடன் மறைந்து பயணித்துக்கொண்டிருந்த 9 இலங்கைப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 4 ஆண்களும் ஒரு பெண்ணுமாக 26 -53 வயது நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் ருமேனியாவில் சட்டரீதியாக தங்குவதற்கான ஆவணங்கள் இருந்தமை கண்டறியப்பட்டது.

மற்றொரு சந்தர்ப்பத்தில் சன்னிகோலு எல்லைப் பொலிஸாரினால் எல்லையை கடக்க முற்பட்ட ருமேனியாவில் தங்குவதற்கான அனுமதி பெற்ற இலங்கையர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் ருமேனியாவில் இருந்து சட்டவிரோதமாக மேற்கு ஐரோப்பா நோக்கி பயணிக்க முற்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image