கனடா உட்பட பல நாடுகளில் தொழில்வாய்ப்பினை பெற்றுத்தருவதாக கூறி இளைஞர் யுவதிகளிடம் பண மோசடியில் ஈடுபட்ட ஒருவரை இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பாணந்துர பிரதேசத்தில் வைத்து கடந்த 2ம் திகதி குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவில் தொழில்வாய்ப்பினை பெற்றுத்தருவதாக பாணந்துர பிரதேசத்தில் நபரொருவர் பணம் சேகரிப்பதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய, குறித்த முறை்பபாட்டாளர் ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு சட்டத்தரணியொருவருடன் வருவதாக குறித்த நபருக்கு தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து விசாரணைப் பிரிவின் அதிகாரி சட்டத்தரணி வேடத்தில் அவ்விடத்திற்கு சென்றுள்ளார். 5 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு ஒப்பந்தம் கைச்சாத்திடும் சந்தர்ப்பத்தில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 10ம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
போலி வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் சுற்றி வளைப்பு
வேலைவாய்ப்புப் பணியகத்தின் புதிய தொலைபேசி இலக்கங்கள்
டுபாயில் தொழில்வாய்ப்பு - ஏமாற்றிய நபர் கைது!
சந்தேகநபர் கைது செய்யப்பட்டதன் பின்னர் அவருக்கு எதிராக 15 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. தொடர்ந்தும் பணியகத்திற்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அதற்கமைய சுமார் 50 இலட்சம் ரூபா வரை இளைஞர் யுவதிகளிடமிருந்து மோசடி செய்திருக்கலாம் என்றும் பணியகம் தெரிவித்துள்ளது.