கட்டாருக்கான இலங்கை தூதரகம் எதிர்வரும் 22ம் திகதி வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தூதரக அதிகாரிகளுக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டமையினால் இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக தூதரகம் தனது முகப்புத்தக்கத்தில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டாரில் தற்போது கொவிட் பரவல் அதிகரித்துள்ள நிலையில் அதிகாரிகளும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
எனினும் தூதரகம்சார் அவசர பணிகளுக்கு +974 77388977 என்ற தொலைபேசி இலக்கத்தின் தொடர்புகளை மேற்கொள்ளுமாறும், தூதரகமானது எதிர்வரும் 23ம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்பதாக தூதரகத்தின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.