வௌிநாட்டு வேலைவாய்ப்புக்காய் காத்திருப்போர் கவனத்திற்கு!

வௌிநாட்டு வேலைவாய்ப்புக்காய் காத்திருப்போர் கவனத்திற்கு!

ஜப்பானில் இலங்கையர்களுக்கு தொழில்வாய்ப்பினை பெற்றுகொடுப்பது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று நாராஹேன்பிட்டியவில் அமைந்துள்ள வௌிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

ஜப்பான் உயர்ஸ்தானிகர் மிஷிகொஷி ஹிதொக்கி ( Mizukoshi Hideaki) மற்றும் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கும் இடையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இரு நாடுகளுக்கிடையில் நிலவும் இராஜதந்திர உறவுகளை பலப்படுத்தி, இலங்கையர்களுக்கு அதிக வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றதுள்ளது.

இதன்போது விசேட நிபுணத்துவம் பெற்ற பயிற்சித் திட்டம் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையர்களுக்கு ஜப்பானில் அதிக வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டது.

ஜப்பானில் தாதியர் பராமரிப்பு சேவைக்கு அதிகளவான கேள்வி காணப்படுவதானால் அத்துறைக்கு இலங்கையர்களை உள்வாங்குவது தொடர்பிலும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image