அவுஸ்திரேலிய பண்ணைகளில் பரிதவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்!

அவுஸ்திரேலிய பண்ணைகளில் பரிதவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்!

குறைவான ஊதியம், பாதுகாப்பற்ற சூழ்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் அவுஸ்திரேலியாவில் பணியாற்றுகின்றனர் என்று அந்நாட்டு இணையதளமான www.sbs.com.au செய்தி வௌியிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பண்ணைகளில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் இவ்வாறு பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் என்றும் அவ்வாறு பண்ணையொன்றில் பணியாற்றிய புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அந்நாட்டு அவ்விணையளதம் செய்தி வௌியிட்டுள்ளது.

பலத்த எதிர்பார்ப்புடனும் கனவுடனும் சீனாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு சென்ற 58 வயதான Xueliang Wang எனும் புலம்பெயர் தொழிலாளி, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பழங்கள் பறிப்பவராக பணியாற்றியுள்ளார்.

மணிக்கு 17 அவுஸ்திரேலிய டொலர் வழங்கப்படும் என்ற விளம்பரத்தைப் பார்த்தே அவர் தொழிலுக்கு சென்றுள்ளார் என்றும் எனினும் மணிக்கு 10 டொலர்கள் மாத்திரமே வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவர் தனது மனைவியுடன் ஒரு கப்பல் கொள்கலனில் வாழும் அவர், அது மாத்திரமன்றி தினமும் 11 மணிநேரம் தொடர்ந்து பணியாற்றிய அவருக்கு உரிய ஊதியம் வழங்கப்படாமல் சுரண்டலுக்குள்ளாகியுள்ளார் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடுமையான கட்டுப்பாடுகளுடன் பணியாற்றும் பண்ணை ஊழியர்கள் மொழி பிரச்சினை காரணமாக வேறிடங்களுக்கு சென்று தொழில் தேடுவதிலும் பல சிரமங்கள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மூலச்செய்தி

 

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image