வௌிநாடு செல்லும் ஆர்வத்துடன் உள்ள இளைஞர் யுவதிகள் போலி இடைத்தரகர்களிம் சிக்கி ஏமாற வேண்டாம் என்று இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட முகவர் நிலையங்களினூடாக வௌிநாட்டு வேலைவாய்ப்பை நாடிச் செல்வது பாதுகாப்பானது என்று அறிவித்துள்ள பணியகம், பணியகத்தில் சுமார் 800 முகவர் நிலையங்கள் பதிவு செய்து உரிமம் பெற்றுள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
வௌிநாடு செல்வதில் பிரச்சினைகள் ஏற்படின் உடனடியாக பணியகத்தின் 1989 என்ற உடனடி இலகத்துடன் தொடர்புகொண்டு 24 மணிநேர ஆலோசனையை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.