முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதி - அமெரிக்கா

முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதி - அமெரிக்கா

முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரயாணிகளுக்கு தமது நாட்டு எல்லை எதிர்வரும் நவம்பர் மாதம் 8ம் திகதி தொடக்கம் திறக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்தள்ளது.

வெள்ளை மாளிகையால் அறிவிக்கப்பட்ட புதிய விதிகளின்படி, பயணம் செய்வதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு எதிர்மறை பரிசோதனை முடிவுகள் கொண்ட தடுப்பூசி போடப்பட்டவர்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று பிபிசி தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆரம்பம் தொடக்கம் பயணிகளுக்கு விதித்திருந்த கடுமையான கட்டுப்பாடுகள் இத்தீர்மானத்தையடுத்து தளர்த்தப்பட்டுள்ளது.

இதனூடாக அமெரிக்கர்கள் அல்லாத ஐக்கிய இராச்சியம் உட்பட ஏனைய ஐரோப்பிய நாடுகள், சீனா, தென் ஆப்பிரிக்கா, ஈரான் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்து.

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிருவாகம் 9US Food and Drug Administration (FDA)) அல்லது உலக சுகாதார தாபனததினால் அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகளை முழுமையாக செலுத்திக்கொண்டவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

உலக சுகாதார தாபனத்தினால் அனுமதிக்கப்பட்ட, பிரித்தானியாவில் பரவலாக பயன்படுத்தியுள்ள அஸ்ட்ராசெனெக்கா மற்றும் சினோவெக் ஆகிய தடுப்பூசிகளை முழுமையாக செலுத்திக்கொண்டவர்களுக்கும் நாட்டுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image