அஸ்வெசும நன்மைகள் திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து கிராம அலுவலர்களுக்கும் மாதாந்த கொடுப்பனவாக 2,500 ரூபா வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
All Stories
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தினூடாக இதுவரை 05 ஆயிரத்து 196 கோடியே 70 இலட்சம் ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அரச சேவையில் இருந்துவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் அரச ஊழியர்களுக்கு இருக்கும் விடுமுறை நாட்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான துறைசார் பேற்பார்வை குழுவின் பிரேரணைக்கு எமது எதிர்ப்பை தெரிவிக்கிறோம் என அரச மாகாண அரச முகாமைத்துவ சேவை அதிகாரிகளின் சங்கத்தின் செயலாளர் அமில பண்டார தெரிவித்தார்.
கொவிட் - 19 வைரஸின் 'JN-1' திரிபினால் ஏற்படக் கூடிய பொது சுகாதார அச்சுறுத்தல் குறைவாகவே காணப்படுவதாகவும், எவ்வாறிருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொவிட் தொற்றை இனங்காண்பதற்கான பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வருடம் எண்ணூறுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
புதிதாக நியமனம் பெற்ற அதிபர்கள் தம்மை கஷ்ட பிரதேசத்திற்கு நியமிக்கப்பட்டமைக்கு எதிராக யாழ். மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
நாட்டில் சுகாதார சேவையின் மனித மற்றும் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்வதற்கும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார செயலாளர், வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் தொழிலாளர்களாகவே அடையாளப்படுத்தப்படும் மலையக பெருந்தோட்ட மக்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்படுவர். அதற்கான புரட்சியை எமது ஆட்சியின் முதல் நாளில் இருந்தே ஆரம்பிப்போம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கொவிட் – 19 தொற்றுநோய் பரவல் காலத்தில் அறிவுறுத்தல்கள் வழங்குதல் மற்றும் நிதி சேகரிப்புக்காக பயன்படுத்தப்பட்ட itukama.lk என்ற செய்கடமை இணையத்தளத்தை தொடர்ந்தும் பயன்படுத்தாமல் இருப்பதற்கு ஜனாதிபதி செயலகம் தீர்மானித்துள்ளது.