1, 5, 6 ஆம் வகுப்புகளுக்கு மாணவர்களை உள்வாங்க கடிதங்கள் வழங்கப்பட மாட்டாது - கல்வி அமைச்சு

1, 5, 6 ஆம் வகுப்புகளுக்கு மாணவர்களை உள்வாங்க கடிதங்கள் வழங்கப்பட மாட்டாது - கல்வி அமைச்சு

2024 ஆம் ஆண்டிற்காக 1, 5, 6 ஆம் வகுப்புகளுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கு கல்வி அமைச்சினால் கடிதங்கள் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில்

பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம் விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்பதுடன் அதிபர்களால் நேர்முகப்பரீட்சைகள் நடாத்தப்பட்டு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் இடம்பெறும்.

பாடசாலைகளுக்கு ஆறாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையானது ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் புள்ளிகளின் அடிப்படையில் மாத்திரம் மேற்கொள்ளப்படுகிறது.

2024 ஆம் ஆண்டில், தரம் 1, 5 மற்றும் 6 தவிர்ந்த இடைநிலை வகுப்புகளுக்கு (க.பொ.த. உயர்தரம் உட்பட) மாணவர்களை உள்வாங்குவதற்கு சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்பதுடன், அந்த பாடசாலைகளில் வெற்றிடங்கள் காணப்படுமாயின் அதிபர்களால் கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின் பிரகாரம் நேர்முகப்பரீட்சைகள் நடாத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர்ப் பட்டியலை அனுமதிக்காக கல்வி அமைச்சிற்கு அனுப்பி வைப்பார்கள்.

அத்துடன் பாடசாலைகளுக்காக மாணவர்களை உள்வாங்குவதற்கான அனுமதிக் கடிதங்களை கல்வி அமைச்சு வழங்காது எனவும் தெரிவித்துக்கொள்கிறோம்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image