E Passport சேவையை ஆரம்பிக்க அரசாங்கம் துரித நடவடிக்கை

E Passport சேவையை ஆரம்பிக்க அரசாங்கம் துரித நடவடிக்கை

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அலுவலகத்தில் தற்போதுள்ள வரிசை ​நெருக்கடிகளை குறைக்கும் வகையில் E Passport சேவையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருவதாக. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டிரான் அலஸ்: கொரிய மொழிப் பரீட்சை காரணமாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அலுவலகத்திற்குமுன்பாக மீண்டும் வரிசைகள் அதிகரித்துள்ளன. அந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் கொரிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தேர்வில் சித்தி பெறுபவர்களுக்கு மாத்திரம் கடவுச்சீட்டு வழங்க  திட்டமிட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். 

புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை ஆட்கள் பதிவு திணைக்களத்தின் ஊடாக வழங்குவதற்கான  சகல ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image