தற்போதைய குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டமூலமொன்றை பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதென மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.
All Stories
மூன்று வருடங்களின் பின்னர் 2024 ஆம் ஆண்டில் 4000 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்நாட்டில் பயிற்றுவிக்கப்படும் 100 தாதியர்களில் 30 – 40 பேர் வரையிலானவர்கள் நாட்டை விட்டுச் செல்கின்றனர் என்றும், இதே நிலை தொடர்வது சிறந்ததல்ல என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 33 சதவீத சம்பள உயர்வை வழங்குவதற்கே பெருந்தோட்ட கம்பனிகள் முன்வந்துள்ளன.
2024 பாதீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களின் 10,000 ரூபாய் வேதன அதிகரிப்பு, எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நவீன மருத்துவ சேவைகளுக்கு உகந்த வகையில் புதிய தொழில்நுட்ப மாற்றங்களுக்கு அமைய எமது நாட்டின் சுகாதார சேவையில் ஏற்படுத்தப்படவுள்ள புதிய மாற்றங்கள் குறித்து விரிவான கலந்துரையாடலை நடத்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
குடும்ப வன்முறைச்செயல் தடுப்புச் சட்டத்தை மீளாக்கம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டமூலங்களின் ஊடாக எந்தவொரு தேர்தலையும் பிற்போட எதிர்பார்க்கவில்லை என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் 2 ஆவது மீளாய்வுக் கூட்டத்தை நிறைவு செய்யும் வகையில், இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு இடையில் பொருளாதார கொள்கைகள் தொடர்பிலான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதென000 சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தூதுக்குழு பிரதானி பீட்டர் ப்ரூயர் (Peter Breuer)தெரிவித்தார்.
போராட்டம் என்ற போர்வையில் வன்முறையை விதைத்தவர்களிடம் இருந்து பாராளுமன்றம், பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி அலுவலகம் உள்ளிட்ட அரச சொத்துக்களை காப்பாற்றி நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தான் மேற்கொண்ட நடவடிக்கைகளை மனித உரிமை மீறல் என சிலர் சுட்டிக்காட்ட முயன்றனர்.
தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் இணைந்து கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்டன.
மலையக பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க, புதிய திட்டம் வகுக்கப்படவுள்ளதாக இலங்கை பாராளுமன்றத்தின் மலையக ஒன்றியத்தின் தலைவர், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.
இலங்கை பாராளுமன்றத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட மலையக ஒன்றியத்தின் முதலாவது கூட்டம், குழு அறை 8இல் நடைபெற்றது. அதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்கள் மனோ கணேசன், சுஜித் சஞ்சய் பெரேரா மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
இக்கலந்துரையாடலுக்கு கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளும், கொழும்பு, கண்டி, பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள தமிழ் தேசிய பாடசாலைகளின் பிரதிநிதிகளும் வருகை தந்திருந்தனர்.
இம்மாவட்டங்களில் அமைந்துள்ள தமிழ் தேசிய பாடசாலைகளில் தற்போது நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பௌதீக வள குறைபாடுகள் பற்றி பேசப்பட்டது. இந்த பிரச்சினைகளுக்கான தீர்வினை கல்வி அமைச்சின் அதிகாரிகள் முன்வைத்தனர்.
இந்த கலந்துரையாடலின்போது பொதுவாக அனைத்து பாடசாலைகளிலும் உயர்தர வகுப்புக்கான ஆசிரியர் பற்றாக்குறை வெளிப்படுத்தப்பட்டது. குறிப்பாக, கணித, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் இந்த நிலைமை மிக மோசமாக உள்ளது; அதனை நிவர்த்தி செய்ய அவசியமான துறை சார்ந்த ஆசிரியர்கள் இல்லை என்பது தெரியவந்தது.
இந்த சந்தர்ப்பத்தில் பிரச்சினைகளிலிருந்து இருந்து மீள்வதற்கு புதியதொரு திட்டத்தை வகுக்கவேண்டிய தேவையுள்ளது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. அதற்கமைய இந்திய அரசாங்கத்துக்கு ஆசிரியர் தேவை பற்றிய திட்டமொன்று தயார் செய்து முன்வைப்பதோடு அதன் ஒத்துழைப்பை பெறுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், மலையக மக்கள் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும், குறைந்தது முழுமையான வசதிகளை கொண்ட ஒரு தேசிய பாடசாலையாவது அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பதையும், அதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டியது மட்டுமன்றி, மலையக மக்கள் அதிகம் வாழ்கின்ற நுவரெலியா மாவட்டத்தில் தேசிய பாடசாலையொன்று இல்லாமை பாரபட்சமானது என்பதையும் அவ்வேளை எடுத்துக்காட்டினார்.
மூலம் - வீரகேசரி