மீண்டும் வௌியானது பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு வர்த்தமானி

மீண்டும் வௌியானது பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு வர்த்தமானி
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக நிர்ணயித்து மீண்டும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
 
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் ஆர்.பி.ஏ. விமலவீரவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த முடிபு 2024 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆந் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் என்றும் அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
முன்னதாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நுவரெலியால் இடம்பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் அறிவித்திருந்தார்.
 
அதற்கமைய வர்த்தமானி அறிவித்தலும் வௌியிடப்பட்டதுடன், அது தொடர்பில் ஆட்சேபனை தெரிவிக்க மே மாதம் 15 ஆம் திகதி வரை கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது.
 
இந்த சம்பள உயர்வுக்கு பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் தங்களது ஆட்சேபனையை வௌியிட்டுள்ளது.
 
இந்நிலையில், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாவாக நிர்ணயித்து மீண்டும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
 
 
தொடர்புடைய செய்திகள் 
 
 
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image