பாடசாலை ஆரம்பிக்க முதல் தடுப்பூசி வழங்குக - இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்

பாடசாலை ஆரம்பிக்க முதல் தடுப்பூசி வழங்குக - இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்

பாடசாலை மீண்டும் தொடங்குவதற்கு முன், ஆசிரியர்கள், அதிபர்கள் உட்பட கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பாக கல்வி அமைச்சுக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை பிடித்துள்ளதாக சங்கத்தில் பிரதித் தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடிதத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களாக கொரோனாத் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக  தடுப்பூசிகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், நாட்டின் முன் நின்று  பணிபுரிந்த சுகாதார மற்றும் பாதுகாப்பு ஊழியர்களுக்கு  தடுப்பூசிக்குப்  வழங்கியதன் பின் மிக ஆபத்தான சூழ்நிலையில் பாதுகாத்ததுடன்பரீட்சைக் கடமைகளில் ஈடுபட்ட  ஆசிரியர்கள் உட்பட கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஏற்கனவே கடந்த பெப்ரவரி மாதம் 23ம் திகதி எமது சங்கத்தினால் கல்வியமைச்சுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், பாடசாலைகள் தொடங்குவதற்கு முன்பு அனைத்து கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தோம்.

அப்போது ஆசிரியர்களுக்கும் கல்விசாரா ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று அரசாங்கம் தெரிவித்திருந்தபோதிலும் செய்யத் தவறியது. இதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் அதிருப்தியை தெரிவித்துக்கொள்கிறது. சுகாதாரத் துறையுடன் கலந்துரையாடல்களை நடாத்தி விரைவாக தடுப்பூசிகளை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் நாங்கள் மிகப் பொறுப்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், எதிர்காலத்தில் தேசிய அளவில்  பரீட்சைகள்  நடைபெறவுள்ளது என்பதும், அதற்கு முன்  மாணவர்களைப் பாடசாலைக்கு  அழைக்க வேண்டும் என்பதும் நீங்கள்  அறிந்த விடயமாகும்.இத்தகைய சூழ்நிலையில், தடுப்பூசியின் முதலாவது அளவைக் கொடுத்து , சில மாதங்களுக்குப் பிறகு இரண்டாவது அளவை கொடுப்பதும்  அதன்படி நோயெதிர்ப்பானது உடலில் சரியாகச் செயற்பட   எடுக்கும் காலமாக அமையும் என்பதும் சுகாதாரத் துறையின் கருத்தாக இருப்பதால் இந்தக் காலகட்டத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கூற வேண்டியுள்ளது.

இத்தகைய சூழலில், நாட்டில் 45 லட்சம்  மாணவர்கள் மற்றும் 3 லட்சம் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும்  பொதுவாகச் சமூகத்தின் பாதுகாப்பினையும் கருத்தில் கொண்டு தடுப்பூசி வழங்குவது  தொடர்பாக நடவடிக்கை  எடுப்பது தவிர்க்க முடியாத  கடமையாகும். 

எனவே, மேற்கூறிய விடயங்கள் குறித்துத் அதிக கவனம் செலுத்திக் குறிப்பிடப்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்க சுகாதாரத் துறையுடன் கலந்துரையாடி  முறையான திட்டமொன்றினை  விரைவாக முன்னெடுக்குமாறு சங்கம் மீண்டும்  பொறுப்புடன் கேட்டுக் கொள்வதாக சங்கத்தின் பிரதித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image