எதிர்வரும் 24ம் மற்றும் 25ம் திகதிகள், அரச விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்தநிலையில் இதுதொடர்பான சுற்றுநிரூபத்தை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த விடுமுறையானது வங்கி மற்றும் வர்த்தத்துறையில் தாக்கம் செலுத்தாது என்றும் பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், 24ம் திகதி நாடுதழுவிய நடமாட்டக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என்பதோடு, 25ம் திகதி அதிகாலை 04 மணிக்கு நடமாட்டக் கட்டுப்பாடு விலக்கப்பட்டு, மீண்டும் அதேநாள் இரவு 11 மணிக்கு நாடுதழுவிய நடமாட்டக்கப்பாடு அமுலாகின்றமை குறிப்பிடத்தக்கது.
மூலம் - சூரியன் எவ். எம். செய்திகள்