GMOA உறுப்பினர்கள் குடும்பத்தினருக்கு தடுப்பூசி- PHI சங்கம் அதிருப்தி
தற்போதைய கொவிட் 19 அச்சுருத்தல் நிலையில் ஏனைய சுகாதார ஊழியர்கள் எதிர்நோக்கும ஆபத்தை கருத்திற்கொள்ளாது தடுப்பூசிகளை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர் மற்றும் அவர்களுடைய உறவினர்களுக்கு வழங்க சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ள தீர்மானம் குறித்து பொது சுகதார பரிசோதகர்கள் சங்கம் அதிருப்தியை வௌியிட்டுள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருடைய உறவினர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுமானால் தாதியர், துணை வைத்தியர்கள், கனிஷ்ட உத்தியோகத்தர்கள் , ஏனைய சுகாதாரத்துறை மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு தடுப்பூசி வழங்குவது மக அவசியமானது. மேல் மாகாணத்தில் உள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்க உறுப்பினர்களுடைய உறவினர் ஐவர் வீதம் தடுப்பூசி வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக அறிவித்துடன் அவர்களுக்கான தடுப்பூசிகள் நேற்று வழங்கப்பட்டன.
இந்நடவடிக்கை எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகங்களும் அதன் சேவைகளை நிறுத்த தீர்மானித்துள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
னைத்து
கொவிட் 19 தடுப்புப் பணிகளில் நேரடியாக ஈடுபட்டு வரும் அனைத்து சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு தடுப்பூசி வழங்கவேண்டுமென்பதே எமது கோரிக்கை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.