மே மாதத்திற்கான ஓய்வூதியத்தை பெற முடியாது போன தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் வசிக்கும் ஓய்வூதியக்காரர்கள் அவர்களுடைய பிரதேச தபால் நிலையங்களை தொடர்புகொள்வதன் மூலம் ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையினால் மிகக் குறைந்த பயனாளிகள் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள முடியாது போயுள்ளது என்று தபால் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த ஓய்வூதியத்தை மீள ஓய்வூதியத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படாது என்றும் அதனால் மே மாதத்திற்கான ஓய்வூதியத்தொகையை பெற்றுக்கொள்ள முடியாது போன வர்கள் அது குறித்து பயப்படத்தேவையில்லை என்றும் தபால் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.