சீன அரசின் உலர் உணவுப் பொதி - வௌிவிவகார அமைச்சின் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு
சீனாவினால் வௌிவிவகார அமைச்சின் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிக்கு வௌிநாட்டுச்சேவை அதிகாரிகள் சங்கம் கடுமையான ஆட்சேபனையை வௌியிட்டுள்ளது.
அரிசி, சீனி, பருப்பு மற்றும் நெத்தலி ஆகியவற்றைக் கொண்ட உலர் உணவுப் பொதியினையே சீனா வௌிநாட்டுச் சேவை அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளது.
இந்த நடவடிக்கை வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகேவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள குறித்த திட்டமானது, சீனா-இலங்கை நட்புறவு சங்கத்தினூடாக இடம்பெற்றது.
உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக தூதரகம் இந்த நிதியை நட்புறவு சங்கத்திற்கு வழங்கியுள்ளது. நிர்வாக சேவையைச் சேர்ந்த மூத்த அமைச்சின் அதிகாரி ஒருவர், வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் முகவரிகளைக் கேட்டபோது இவ்விடயம் தெரியவந்துள்ளது.
இந்த நடவடிக்கையினால் அதிருப்தியடைந்த வெளிநாட்டு சேவை அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் வெளிவிவகார செயலாளர் கொலம்பகேவை சந்தித்தனர். அவர்கள் செயலாளரிடம் கையளித்துள்ள கடிதத்தில் “குறிப்பாக இலங்கை வெளிநாட்டு சேவை உறுப்பினர்கள் அத்தகைய நன்கொடைகளை ஏற்றுக்கொள்வது பொருத்தமற்றது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம், மேலும் இது வெளிநாட்டு சேவையையும் வெளியுறவு அமைச்சகத்தையும் இக்கட்டான சூழ்நிலையில் தள்ளும் என்று சுட்டிக்காட்டியள்ளனர்.
நிலைமையை சமாளிக்கும் வகையில், உணவுப் பொதிகளை வெளிவிவகார அமைச்சின் நலன்புரிச் சங்கத்திற்கு வழங்கலாம் என்று செயலாளர் தெரிவித்தபோதிலும், பிரதமர் பதவியில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அவர் பதவி விலகியுள்ள நிலையில் தற்போது அவ்விடயம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
எது எவ்வாறு இருப்பினும் ஊழியர்கள் நிவாரண பொதியை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர் என்று சண்டே டைம்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.