குடும்ப அங்கத்தவர்களுக்கான தடுப்பூசி- வரப்பிரசாதமல்ல- GMOA

குடும்ப அங்கத்தவர்களுக்கான தடுப்பூசி- வரப்பிரசாதமல்ல- GMOA

மேல் மாகாணத்தில் உள்ள சுகாதார ஊழியர்களின் பெற்றோருக்கு செலுத்த 13000 தடுப்பூசிகளை சுகாதார அமைச்சு வழங்கியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஷெனால் பெர்ணாண்டோ நேற்று (27) தெரிவித்தார்.

கொவிட் 19 தொற்றுக்கான தடுப்பூசி வழங்கல் திட்டம் ஆரம்பமாகி 4 மாதங்களாகியுள்ளன. இதுவரை 2 மில்லியன் வரை தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் முதல் சுகாதார ஊழியர்களின் குடும்ப அங்கத்தினருக்கு தடுப்பூசி வழங்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்து வந்தது.

நாட்டில் நான்காவது கொவிட் அலை ஆரம்பமானதுடன் பெரும் எண்ணிக்கையான நோயாளிகள் சிகிச்சைக்காக வைத்தியசாலையை நாடுகின்றனர். எனவே சுகாதாரதுறை ஊழியர்களூடாக அவர்களுடைய குடும்பங்கள் மற்றும் அவர்கள் வாழும் பிரதேசங்களில் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அதற்கு தீர்வாக தடுப்பூசி வழங்குவது சிறந்தது என்று அரசாங்கத்திடம் தௌிவுபடுத்தினோம். அதனூடாக சுகாதார அமைச்சு 13,000 தடுப்பூசிகளை மேல் மாகாணத்தில் வசிக்கும் சுகாதார ஊழியர்களின் பெற்றோருக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுவரை வழங்கப்பட்ட தொகையில் ஒரு வீதத்திற்கும் குறைவாகவே இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது எமக்கான வரப்பிரசாதம் அல்ல. தொற்று ஏற்படாதிருப்பதற்கான முன்னெடுக்கப்படும் நடவடிக்கையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image