நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாடு அடுத்த மாதம் 7 ஆம் திகதி வரை தளர்வின்றி நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
முன்னர் அறிவிக்கப்பட்டது போன்று, எதிர்வரும் 31 ஆம் திகதியும், அடுத்த மாதம் 4 ஆம் திகதியும் நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படமாட்டாது எனவும் அவர் அறிவித்துள்ளார்.