இந்தியாவில் பணிக்கு சென்ற இலங்கையர்களுடைய ETF பிரச்சினை

இந்தியாவில் பணிக்கு சென்ற இலங்கையர்களுடைய ETF பிரச்சினை

இலங்கை தொழில் வழங்குநர்களின் கீழ் இந்தியாவில் தனியார் நிறுவனங்களுக்கு பணிக்காக சென்ற இலங்கை ஊழியர்களின்

சேவைக் காலம் பூர்த்தியாகியுள்ள நிலையில் அந்நாட்டு அந்நாட்டு சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பங்களிப்பு செய்யப்பட்ட மீள பெறுவதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது என்று தொழில் அமைச்சுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுளளன.

இலங்கையில் பணியாற்றுபவர்கள் ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கு பங்களிப்பு வழங்குவது போன்று இந்தியாவில் பணியாற்றும் இலங்கையர்கள் அந்நாட்டு சமூக பாதுகாப்பு முறைக்கு பங்களிப்பு வழங்குதல் கட்டாயமாகும். 58 வயது நிறைவடைந்த பின்னர் அந்நிதியை மீளப்பெற முடியும். எனினும் அவர்கள் நாடு திரும்பி பல ஆண்டுகளின் பின்னர் அப்பணத்திற்கு உரிமைக்கோருவது நடைமுறை ரீதியாக சிக்கலான விடயம் என்று அமைச்சு அடையாளங்கண்டுள்ளது. இலங்கையின் பிரதான நிலை நிறுவனங்களில் நான்கில் பணியாற்றிய ஊழியர்கள் இச்சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இலங்கை இந்தியாவுக்கிடையில் முத்தரப்பு சமூக பாதுகாப்பு ஒப்பந்தமொன்று கைச்சாத்திட வேண்டும் என்று தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அதற்காக 1958ம் ஆண்டு 15ம் இலக்க ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தை திருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image