நாளை கூடுகிறது சம்பள நிர்ணய சபை: பிரதிநிதிகளின் முழு விபரம் இதோ...
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளத்தை வழங்குவது குறித்து தீர்மானிப்பதற்காக நாளை (08) திங்கட்கிழமை சம்பள நிர்ணய சபை கூடவுள்ளது.
கொழும்பிலுள்ள தொழில் அமைச்சில் நாளை மதியம் 2 மணியளவில் தொழில் ஆணையாளர் தலைமையில் சம்பள நிர்ணய சபை கூடவுள்ளது.
இதில் தொழில் வழங்குனர்களான கம்பனிகளின் 8 பிரதிநிதிகளும், தொழில் பெறுனர்களான தொழிலாளர்கள் சார்பில் தொழிற்சங்க பிரதிநிதிகள் 8 பேரும், அரசாங்கத்தின் மூன்று உறுப்பினர்களும் என மொத்தமாக 19 பேர் அங்கம் வகிக்கின்றனர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா நாளாந்த அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்காக முன்னெடுக்கப்பட்ட கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில், தொழிற்சங்கங்களுக்கும், முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை.
இந்த நிலையில், சம்பளக் கட்டுப்பாட்டு சபை மூலம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1,000 ரூபா வரைக்கும் அதிகரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தொழில் உறவுகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கடந்த மாதம் 25ஆம் திகதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
இதற்கமைய, 860 ரூபா அடிப்படை சம்பளமும், 140 ரூபா வாழ்க்கைச்செலவு கொடுப்பனவையும் வழங்கவுள்ளதாக தொழில் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதற்கமைய, முறைமையொன்றைத் தயாரித்து வருவதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நாளைய தினம் சம்பள நிர்ணய சபை கூடவுள்ளது.
தேயிலை துறை சம்பள நிர்ணய சபையில் உள்ள பிரதிநிதிகளின் விபரம்,
அரசாங்க பிரதிநிதிகள் - 03 பேர்
ஐ.எவ்.ஆர்.எஸ்.தேவதாஸ்
சண்முகம் சுப்பையா
சட்டத்தரணி சஞ்சய கமகே
தொழில் வழங்குனர்களின் பிரதிநிதிகள் - 08 பேர்
லலித் ஒபேசேகர
ரொஸான் ராஜதுறை
சானக சமாரதிவாகர
மைத்திரிபால ஹேரத்
வஜிர எல்லேபொல
பிரசாத் டி சில்வா
டி.ஆர்.ரத்வத்த
சானக அலவத்தேகம
தொழிலாளர்கள் சார்பான தொழிற்சங்க பிரதிநிதிகள் - 08 பேர்
கே.மாரிமுத்து
எஸ்.முத்துகமார்
சிறிமான்ன ஹெட்டிகே சாந்த
ஆர்.எம்.கிருஷ்ணசாமி
கிரிந்தகமகே பியதாஸ
பி.ஜி.சந்ரசேன
ரொபட் ப்ரான்ஸிஸ்
கிட்ணன் செல்வராஜ்