பொது மக்கள் EPF நிதியில் விளையாடும் அரசு

பொது மக்கள் EPF நிதியில் விளையாடும் அரசு

இலங்கையில் மிகப்பெரிய சமூக பாதுகாப்பு நிதியமான ஊழியர் சேமலாப நிதியத்தினால் முதலீடு செய்யப்பட்ட 6 முதலீடுகளை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு பங்குசந்தையில் 6 நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகளே முழுமையாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2020 டிசம்பர் மாதம் 31ம் திகதியுடன் நிறைவடைந்த நிதியாண்டில் ACL ப்ளாஸ்டிக்ஸ், பலாங்கொட பெருந்தோட்ட கம்பனி, Chemanex, எக்போலங்கா ஹோல்டிங்க்ஸ், மல்வத்த பெருந்தோட்ட கம்பனி, செலொன் டிவலப்மண்ட்ஸ் ஆகிய முதலீடுகள் முழுமையாக விற்கப்பட்டுள்ளன.

குறித்த முதலீடகளில் ஏற்பட்டுள்ள நட்டத்தை மறைப்பதற்காக இவ்வாறு விற்கப்பட்டுள்ளன. இதேவேளை,நிதியத்தினால் முதலீடு செய்யப்பட்ட டர்டன்ஸ் வைத்தியசாலை 250,990 பங்குகள் , டிப்ட் ப்ரடன்ட்ஸ் பிஎல்சி யின் 1,750,609 பங்குகள், ஹேலிஸ் பிஎல்சியின் 2,387,818 பங்குகள், நவலோக்கா வைத்தியசாலை குழுமத்தின் 2,001,775 பங்குகள் ஆகியவற்றையும் விற்பனை செய்ய கடந்த நிதியண்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

2020 செப்டெம்பர் மாதம் 30ம திகதி நிதியத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் 81 பங்குகளுக்கு முதலீடு செய்யப்பட்டிருந்ததுடன் 2020 டிசம்பர் மாதம் 31ம் திகதி இறுதியில் அது 74 என அறிக்கையிடப்பட்டுள்ளது. இந்த 74 நிறுவனங்களில் மொத்தமாக 83,46 பில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளதுடன் 2020 டிசம்பர் 31ம்திகதியன்று இதன் மொத்த சந்தைப் பெறுமதி 70.80 என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருண

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image