கொரோனா தடுப்பூசி செலுத்திய பின்னர் புகைக்கலாமா?

கொரோனா தடுப்பூசி செலுத்திய பின்னர் புகைக்கலாமா?

கொவிட் 19 தடுப்பு மருந்து செலுத்திக்கொள்பவர்கள் மதுபானம் மற்றும் புகைத்தலை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் டொக்டர் சமாதி ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

புகைத்தல் மற்றும் மதுபான பழக்கம் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் அவற்றை பயன்படுத்தினால் உடலில் நோயெதிர்ப்புச் சக்தி குறையும் என்றும் அப்பழக்கங்களுக்கு அடிமையாகியுள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது பயன்தராது என்றும் எனவே தடுப்பு மருந்தை புகைத்தல் மற்றும் மதுபான பழக்கமற்றவர்களுக்கு வழங்குவதே நியாயமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த பழக்கங்கள் உள்ளவர்கள் தடுப்பூசியை பெற்றிருப்பினும் குறைந்தது 6 மாதங்களுக்கு அவற்றை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என்றும் டொக்டர் சமாதி ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image