C190, C189 சமவாயங்களை இலங்கையில் அங்கீகரிப்பது அவசியம்- தொழில் அமைச்சர்

C190, C189 சமவாயங்களை இலங்கையில் அங்கீகரிப்பது அவசியம்- தொழில் அமைச்சர்

எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் C190 மற்றும் C189 ஆகிய சமவாயங்களை இலங்கையில் அங்கீகரிப்பதற்கான கலந்துரையாடல்களையும் செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியும் என்று தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ILO C190 மற்றும் C180 சமவாயங்கள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு இன்று (23) ஜைக் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற செயலமர்வில் கலந்துகொண்டு கருத்து வௌியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் பணியிடங்களில் ஊழியர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கவும் வீட்டுப்பணியாளர்களுக்கு தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ILO C190 மற்றும் C189 சமவாயங்களை அங்கீகரிப்பது அவசியம். தற்போது பாராளுமன்றில் வரவு செலவு திட்டம் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. டிசம்பர் வரை இவ்விவாதம் தொடரும். அதன் பின்னர் ஜனவரி வரை பாராளுமன்றம் மூடப்பட்டிருக்கும். எனவே ஜனவரி மாதம் தொடக்கம் மார்ச் மாதம் வரையில் குறித்த சமவாயங்களை அங்கீகரிப்பதற்கான நடைமுறைகளை முன்னெடுக்க முடியும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இச்செயலமர்வில் தொழில் ஆணையாளர் நாயகம் உட்பட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

journalist1

journalist2

journalist3

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image