அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவித்தல்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவித்தல்

அரச ஊழியர்கள் சேவையில் இருந்து ஓய்வுபெறுவது தொடர்பான அறிவித்தலை அரசாங்கம் நேற்று பாராளுன்றத்தில் வெளியிட்டது.

ஜனவரி முதலாம் திகதிக்கு பிறகு 55 வயதை அடையும் அரச ஊழியர்கள் விரும்பினால் ஓய்வுபெறலாம் என அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (24) இடம்பெற்ற வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தின்போது தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித்த ஹேரத், அரச ஊழியர்கள் ஓய்வுறும் திகதி ஆரம்பிக்கும் தினம் குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

விஜித்த ஹேரத் தொடர்ந்து தெரிவிக்கையில்,

வரவு செலவு திட்ட உரையில் நிதி அமைச்சர் அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 65வரை அதிகரிப்பதாக அறிவித்திருந்தார். இதனால் அரச ஊழியர்கள் மத்தியில் பாரிய குழப்பம் ஏற்பட்டிருக்கின்றது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் இறுதியில் பலர் ஓய்வு பெறுவதற்கு எதிர்பார்த்திருக்கிக்றனர். அதனால் அவ்வாறான அரச ஊழியர்களின் நிலை என்ன? அரசாங்கம் தெரிவித்திருக்கும் ஓய்வுபெறும் வயது அமுலுக்குவரும் திகதி தெரிவிக்கப்படவில்லை. அதனாலும் அரச ஊழியர்கள் குழப்பமடைந்திருக்கின்றனர்.

அத்துடன், ஓய்வூதியர்களின் ஓய்வூதிய சம்பள முரண்பாடு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்ற பணிப்பாளர் நாயகத்துக்கும் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்கின்றது.

அதனால் அவர் தற்போது நீதிமன்றம் சென்றிருக்கின்றார். 2வருடமாகியும் அவர்களின் இந்த பிரச்சினைக்கு தீர்வு இல்லை. இதன் காரணமாக நாட்டில் 6இலட்சத்தி 60ஆயிரம் ஓய்வூதியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் சம்பள முரண்பாட்டை எவ்வாறு தீர்ப்பதென்று அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும்.

மேலும் அரச ஊழியர்களுக்கு வழங்கும் வாழ்க்கைச்செலவு கொடுப்பனவு 2014ஆம் ஆண்டுக்கு பிறகு வாழ்க்கைச்செலவுக்கேற்ப வழங்கவில்லை. நுகர்வோர் பாதுகாப்பு அதிககாரசபையின் அறிக்கையின் பிரகாரம் 2014 முதல் இன்றுவரை வாழ்க்கைச்செலவாக அரச ஊழியர்களுக்கு 14 ஆயிரம் ரூபா அதிகரிக்கப்படவேண்டும். அதன் அடிப்படையில் மொத்தமாக 21ஆயிரத்தி 900ரூபா அரச ஊழியர்களின் வாழ்க்கைச்செலவாக அரசாங்கம் வழங்கவேண்டும். அந் காnடுப்பனவு தொடர்பில் அரசாங்கத்திடம் பதிலும் இல்லை என்றார்.

இதற்கு அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் பதிலளிக்கையில், அரச ஊழியர்கள் அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதிக்கு பின்னர், 55 வயதுக்கு பிறகு அவர்கள் விரும்பினால் ஓய்வுபெறலாம். 65வயதுவரை இருக்கவேண்டும் என கட்டாயம் இல்லை என்றார்.

(வீரகேசரி)

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image