பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்: சம்பளமும் அதிகரிப்பு - பாராளுமன்றில் அறிவிப்பு

பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்: சம்பளமும் அதிகரிப்பு - பாராளுமன்றில் அறிவிப்பு

அரச சேவைக்கு உள்வாங்கப்பட்டுள்ள பட்டதாரிகள் நிரந்தரமாக்கப்படுவதுடன், அவர்களுக்கு ரூ 41,000 மாதாந்த சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (24) இடம்பெறும் வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின் இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

சுமார் 58,000 பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கப்பட்டது அத்துடன் அவர்களுக்கு சிறந்த பயிற்சியை வழங்க வேலைத்திட்டம் ஏற்படுத்தப்பட்டது. அரச, தனியார் துறைகளில் தலைமைத்துவம் மற்றும் முகாமைத்துவ பயிற்சி, அத்துடன் தொழில்நுட்பம் மற்றும் மொழி தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்பட்டன. ஆனாலும் கொவிட் நிலைமையின் காரணமாக அதனை வெற்றிகரமாக முடிக்க முடியாமல்போனது.

அனைவரையும் இந்த வரவு செலவுத் திட்டத்தினூடாக அரச சேவையில் நிரந்தரமாக்கி, 41,000 ரூபா சம்பளம் வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image