ரயில்வே திணைக்களத்தில் 8,000 வெற்றிடங்கள்- விநியோகித்தலை நிறுத்திய நிலைய பொறுப்பதிகாரிகள்

ரயில்வே திணைக்களத்தில் 8,000 வெற்றிடங்கள்- விநியோகித்தலை நிறுத்திய நிலைய பொறுப்பதிகாரிகள்

பொதி பணிகளை விநியோகித்தல் இன்று (07) தொடக்கம் இடைநிறுத்த ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் தீர்மானித்துள்ளனர் என்று இலங்கை ரயில்வே நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கனிஷ்ட தொழிலாளர்களின் பற்றாக்குறை காரணமாக இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என்று ரயில்வே பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் கசுன் சாமர ஜயசேக்கர தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து வௌியிடுகையில், கனிஷ்ட ஊழியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அதிகாரிகள் தவறியுள்ளனர். தொடர்ச்சியாக சர்வதேச விதிமுறைகளையும் விதிகளையும் மீறி கடமைகள் வழங்கப்படுகிறது.

 

பெரும்பாலான 6 ஊழியர்கள் தேவைப்படும் நிலையங்களில் ஒருவர் மட்டுமே கடமையாற்றுகின்றார். இவ்விடயம் தொடர்பில் கடந்த 2020ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18ம் திகதி நடத்தப்பட்ட சந்திப்பில் உரிய அதிகாரகள் மற்றும் அரசியல் தலைமைகள் தௌிவுபடுத்தப்பட்டுள்ளனர். எனினும் இதுவரை தீர்வு வழங்க தவறியுள்ளனர். ரயில்வே திணைக்களத்தில் சுமார் 8,000 வெற்றிடங்கள் காணப்படுகன்றன. குறிப்பாக திணைக்களத்துடன் இணைந்த உப திணைக்கள போக்குவரத்து பிரிவில் மாத்திரம் 3,500 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. எனவே இன்று தொடக்கம் பொதிகள் விநியோகத்தல் செயற்பாடுகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கசுன் சாமர ஜயசேக்கர தெரிவித்துள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image