தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாவாக வழங்க தவறும் தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் வௌியான விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைகால தடை விதிக்குமாறு தோட்டக் கம்பனிகள் முன்வைத்த மனுவை நீதிமன்றம் மறுத்துள்ள நிலையில் மார்ச் மாதம் தொடக்கம் ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவது கட்டாயமாகும்.
வழக்கின் இறுதித் தீர்ப்பு வரை தோட்டத் தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட சம்பளத்தை வழங்கியே ஆகவேண்டும். தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தொழில் ஆணையாளருக்கு உண்டு என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.