தற்போதைய பொருளாதார நிலை சீரடையும் வரையில் ஊழியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்குவது சாத்தியமில்லை என்று தனியார் துறை நிறுவனத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவுடனான நேற்றைய (10) கலந்துரையாடலின் போது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி வருவாய் வீழ்ச்சி, கட்டண அதிகரிப்பு, உற்பத்தி, மூலப்பொருட்கள் இறக்குமதி செலவு அதிகரிப்பு என்பவற்றுடன் வங்கிகளில் அதிகளவு வரி அறவிடுகின்றமை போன்ற காரணங்களினால் தற்போது ஊழியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்குவது கடினம் என்று தனியார்துறைத் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.