மண்ணாய் போகும் ஊழியர் சேமலாப நிதிய நிதி!

மண்ணாய் போகும் ஊழியர் சேமலாப நிதிய நிதி!

 பிரயோசனமற்ற முதலீட்டின் காரணமாக ஊழியர் சேமலாப நிதியத்துக்கு சொந்தமான 530 கோடி ரூபா கடந்த வருடம் இழக்கப்பட்டுள்ளதாக அரச கணக்காய்வாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

நிறுவனமொன்றில் செய்யப்பட்ட முதலீடு காரணமாக 30 கோடி ரூபா அந்நிறுவனத்தின் அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்பட்டமையினால் இல்லாமல் போயுள்ளதாகவு கணக்காய்வாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கு மேலதிகமாக ஊழியர் சேம லாப நிதியத்தில் இருந்து 500 கோடிக்கும் அதிகமான நிதி ஹோட்டல் தொகுதி ஒன்று நிர்மாணிப்பதற்கான முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் 2020 ம் ஆண்டு அதன் வியாபாரப்பணிகள் ஆரம்பிக்கப்படாமையினால் அந்நிதியில் இதுவரை எவ்வித வருமானமும் ஈட்டப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஊழியர் சேமலாப நிதியம் பட்டியலிடப்பட்ட 83 நிறுவனங்களில் 8,346 ரூபா முதலீடு செய்யப்பட்ட போதிலும் 2020 டிசம்பர் மாதம் 31ம் திகதியாகும் போது அம்முதலீட்டின் சந்தை பெறுமதி 7080 கோடி ரூபாவாக 15 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தேசிய கணக்காய்வாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image