2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு வழங்க முன்மொழியப்பட்ட 10,000 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவில் 5,000 ரூபாவை ஜனவரி மாதம் முதல் வழங்குவதற்கு ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அத்துடன், மருத்துவர்களின் Disturbance, Availability and Transport (DAT) கொடுப்பனவை ரூ.35,000 வில் இருந்து 70,000 ரூபாவாக அதிகரிக்கவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின்ஆய்வுக் கொடுப்பனவை 25% இனால் அதிகரித்து ஜனவரி மாத சம்பளத்துடன் வழங்கவும் ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.