பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நாளை

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நாளை

மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை, நாளை (09) தொழிலமைச்சில் இடம்பெறவுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவானது, தொழிலமைச்சில் நாளை (09) கூடவுள்ளது. இக்குழுவில் தொழிற்சங்கங்கள், பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் தொழிலமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை பெற்றுக் கொடுக்கும் வகையில், இப்பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. இதற்கான கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட பெருந்தோட்ட நிறுவனங்களிடம் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே, பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த பணிப்புரையை விடுத்துள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். இதன் போது கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பில் தமக்கு அறிவிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் கேட்டுக் கொண்டிருந்தார். இதற்கிணங்க இதுவரை பெருந் தோட்ட நிறுவனங்கள், இது தொடர்பான தமது நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கு தெரிவிக்கவில்லை என்பதையும் வடிவேல் சுரேஷ் எம்பி சுட்டிக் காட்டியுள்ளார்.

மூலம் - தினகரன்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image