துல்ஹிரிய வர்த்தக வலய ஆடைத்தொழிற்சாலையில் 400 பேருக்கு தொற்று

துல்ஹிரிய வர்த்தக வலய ஆடைத்தொழிற்சாலையில் 400 பேருக்கு தொற்று

கேகாலை மாவட்டத்தில் அமைந்துள்ள துல்ஹிரிய வர்த்தக வலயத்தில் 400 கொவிட் 19 தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டதையடுத்து ஆடை உற்பத்தி தொழிற்சாலையொன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

எழுமாற்றாக சுமார் 2000 ஊழியர்களுக்கு மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையின் போது 400 தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டனர் என்று கேகாலை மாவட்டச் செயலாளர் மஹிந்த எஸ் வீரசூரிய தெரிவித்தார்.

 

முகாமை மற்றும் உரிய அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலையடுத்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

தொற்றாளர்களுடன் தொடர்புபட்ட ஏனையோரை அடையாளங்கண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அடையாளங்காணப்பட்ட தொற்றாளர்களின் பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image