அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நிலுவை சம்பளத்தை வழங்குமாறு கோரிக்கை
2021.01.01 திகதி நிரந்தர நியமனம் வழங்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நிலுவை சம்பளம் மற்றும் ஏப்ரல் மாத சம்பளம் கிடைக்காமை தொடர்பில் பல்நோக்கு அபிவிருத்தி பணிக்குழு திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம் கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2019.08.01 மற்றும் 2019.09.16 முதலான திகதிகளில் பயிலுனர்களை பயிற்சியில் இணைத்து 2021.01.01 ஆம் திகதி பட்டதாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கு நிரந்தரமாக்கப்பட்டனர்.
இவ்வாறு நிரந்தரமாக்கபட்டு அரச சேவைகள் அமைச்சின் ஒன்றிணைந்த சேவைப் பணிப்பாளர் நாயகத்தினால் உங்களது திணைக்களத்தின் கீழ் பெருமளவான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆட்சேர்க்கப்பட்டனர்.
2021.01.01 ஆம் திகதி முதல் நிரந்தரமாக்கப்பட்டு உங்களது திணைக்களத்திற்கு ஆட்சேர்க்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஜனவரி, பெப்ரவரி, மார்ச் மாதங்களில் நிலுவை சம்பளம் கிடைக்கவில்லை.
2021 ஏப்ரல் மாதத்திற்கு மாதத்திற்கான நிரந்தர சம்பளம் 2021 மே மாதம் 18ஆம் திகதியாகும்போது கிடைக்கப்பெறவில்லை என சில காரியங்களில் அறிக்கை ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எமது சங்கத்திற்கு அறியப்படுத்தப்பட்டதற்கு அமைய இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலுவை கொடுப்பனவை வழங்குவதில் தாமதம் இருக்குமாயின் அந்த தாமதத்தை தவிர்த்து, உரிய சம்பளத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
என தெரிவிக்கப்பட்டுள்ளது.