அபிவிருத்தி உத்தியோகத்தர் - பயிலுனர்களை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்த்தல்
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயிலுனர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பான விடயங்கள் குறித்து கல்வி அமைச்சுடன், ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
ED/EST/20/42: 2020 செப்டம்பர் மாதம் 30ஆம் திகதிய அமைச்சரவை பத்திரத்திற்கு அமைய, கல்வி அமைச்சரினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
2020 நவம்பர் மாதம் 6ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டதற்கமைய, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயிலுனர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பான விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இன்று (20) காலை 10 மணிக்கு கல்வி அமைச்சுக்கு செல்லவுள்ளதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது