பெண்களுக்கு முச்சக்கர வண்டிகளை பழுதுபார்க்கும் பயிற்சி!

பெண்களுக்கு முச்சக்கர வண்டிகளை பழுதுபார்க்கும் பயிற்சி!

டேவிட் பீரிஸ் குழுமம் சில வருடங்களுக்கு முன்னர் முச்சக்கர வண்டிகளை பழுதுபார்த்தல் மற்றும் சேவையாற்றுதல் தொடர்பான விசேட தொழில்நுட்பப் பயிற்சிகளை வழங்கி உழைக்கும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் அவர்களுக்கு அதிக வருமானம் ஈட்டும் சுயதொழில் வாய்ப்புகளுக்கு உதவுவதற்கும் ஒரு திட்டத்தை ஆரம்பித்தது.

‘தொழில்நுட்பப் பயிற்சியின் மூலம் பெண்களை மேம்படுத்துதல்’ என்ற திட்டம், பயிற்சி பெற்ற, சான்றிதழ் பெற்ற பெண் மெக்கானிக்களுக்கு உதவும் வகையில் தொடங்கப்பட்டது.

பெண்களை மட்டும் இலக்காகக் கொண்டு இலவசமாக வழங்கப்படும் இயந்திரவியல் அடிப்படையிலான ஒரேயொரு தொழில்நுட்ப வேலைத்திட்டமாக இது இலங்கையில் முதன்முதலாக உள்ளது.

2017 ஆம் ஆண்டு பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் இலங்கை மகளிர் பணியகத்துடன் இணைந்து டேவிட் பீரிஸ் குழுமத்தால் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டம் பெண்களை இலக்காகக் கொண்ட முதலாவது மற்றும் ஒரே இயந்திர அடிப்படையிலான தொழில்நுட்ப திட்டமாகும்.

களுத்துறை, பொலன்னறுவை, கிளிநொச்சி, அநுராதபுரம், மொனராகலை, மாத்தறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இந்த நிகழ்ச்சித்திட்டம் வெற்றிகரமாக நடாத்தப்பட்டுள்ளதுடன், சுமார் 400 பெண்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டதுடன், பங்குபற்றியவர்களுக்கு முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் பழுது மற்றும் பராமரிப்பு தொடர்பான அடிப்படை மூன்று மாத தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

பயிற்சித் திட்டத்தின் முடிவில், டேவிட் பீரிஸ் குழுமம் அவர்களுக்குச் சான்றிதழையும், அவர்களது சொந்தப் பட்டறைகளைத் தொடங்குவதற்கான கருவித் தொகுப்பையும் வழங்கியது.

டேவிட் பீரிஸ் குழுமத்தின் சமூக நலக் குழுவால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு முழுமையாக நிதியளிக்கப்பட்டது.

இத்தகைய நன்கு பயிற்சி பெற்ற பல பெண்கள் தங்கள் சொந்த முச்சக்கர வண்டி பழுதுபார்க்கும் பட்டறைகளை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளனர், இன்று இந்த முயற்சியின் காரணமாக அவர்களது தங்களது குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளனர்.

மூலம் - சண்டே ஒப்சேவர்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image