ஆசிரியர் நியமனம் தொடர்பில் கல்வி அமைச்சர் வௌியிட்ட தகவல்

ஆசிரியர் நியமனம் தொடர்பில் கல்வி அமைச்சர் வௌியிட்ட தகவல்

ஒன்பது மாகாணங்களிலும் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு தேவையான ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த  தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆசிரியர் நியமனங்கள் தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் எம்.பி. ஜயந்த சமரவீர வியாழக்கிழமை (07) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே  இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆசிரியர் நியமனம் தொடர்பாக  அனைத்து மாகாண ஆளுநர்களுடனும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நான் அது தொடர்பில் கலந்துரையாடினேன்.

அத்துடன்  அனைத்து மாகாணங்களிலுமுள்ள கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் சூம் தொழில்நுட்பம் ஊடாக பேச்சுவார்த்தையொன்று நடத்தப்படவுள்ளது.

விரைவாக மேற்கொள்ள வேண்டிய ஆசிரியர் நியமனங்களை வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள் நிலவும் வெற்றிடங்களை கவனத்திற்கொண்டு நியமனங்கள் தொடர்ந்து வழங்கப்படுகின்றள என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image